முஹிடினுக்கு ஆதரவளிக்கும் அம்னோவின் அமைச்சர்களுடன் சமரசம் வேண்டாம்

கட்சிக் கொள்கைக்கும் முடிவுக்கும் முரணாக பிரதமர் முஹிடின் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் அம்னோவின் அமைச்சர்களுடன் சமரசம் காண வேண்டாமென உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்க்காஸி வலியுறுத்தியுள்ளார்.கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் எவர் மீதும் கட்டொழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 9 அம்னோ அமைச்சர்கள் மக்கள், கோவிட்-19 நெருக்கடி, மலாய்க்காரர் ஒற்றுமை, அரசு ஒதுக்கீடு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு முஹிடினுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்னோ பிளவு பட்டதாகவும், அதில் உள்கட்சி மோதல் வலுத்து வருவதாகவும், ஒற்றுமை குலைந்துள்ளதாகவும் பலரும் கூறுவதற்கு மேற்கண்ட சில புல்லுருவிகளின் துரோகச் செயல்பாடுகள்தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். அவர்கள் பதவி மோகத்தால் கட்சிக்குத் துரோகம் இழைக்கிறார்கள். கட்சியை சுயநலத்திற்காக விற்கக் கூடியவர்கள். அவர்கள் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் என்றும் அவர் விமர்சித்தார். அவர்களின் நோக்கமே சுய நலம்தான் என்றும் அம்மாதிரியானவர்கள் கட்சியில் இருக்கக் கூடாதென்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்னோவின் அமைச்சர்கள், முஹிடின் யாசினுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 7ஆம் தேதி, அம்னோவின் உச்சமன்றம் முஹிடினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதை அடுத்து, முஹிடினின் நிலை தர்மசங்கடத்தில் ஊசலாடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − four =