முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 10இல் திறக்கப்படும்

பச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்கள் வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் கடுமையான நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இந்த வழிபாட்டுத் தலங்களில் 12 வயதில் இருந்து 70 வயதிற்குட்பட்ட 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். உள்ளே செல்பவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். கிருமி நாசினியால் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.
வாரத்தில் சில முக்கிய தினங்களில் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என்றார் அவர்.
இருப்பினும் இது அந்த வழிபாட்டுத் தலங்களின் அளவைப் பொறுத்தது என நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த வழிபாட்டுத் தலங்களில் நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மலேசியப் பிரஜைகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.
கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அனுமதி உண்டு என அவர் தெரிவித்தார்.
இந்து, பௌத்தம், கிறிஸ்துவம், தாவோயிசம், சீக்கியர் ஆகிய மதங்களின் பிரதிநிதிகளுடன் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா முகமட் சாடிக் நடத்திய கலந்தாலோசனைக்குப் பிறகு இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.
வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகள் மீறப்பட்டால் இந்தத் தளர்வு மீட்டுக் கொள்ளப்படும் என அவர் நினைவுறுத்தினார்.
திருமணம் உட்பட எந்த விதமான வைபவங்களும் இடம்பெறக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =