முஸ்லிம் அல்லாதோரின் உரிமையை உறுதி செய்யுங்கள்

    முஸ்லிம் அல்லாதோரின் மத மேம்பாட்டையும் வளர்ச்சியையும் தடுக்கும் வகையில் அரசு புதிய சட்டங்களை உருவாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று செலங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் கேட்டுக் கொண்டார்.அம்மாதிரியான சட்டம் உருவாக்கப்பட்டால் அது முஸ்லிம் அல்லாதோரின் கடும் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அரசின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என்றும் எச்சரித்தார்.அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அது பற்றி சட்ட அமைச்சரும் சரவாக்கியருமான வான் ஜுனைடி துவாங்கு ஜாபார் மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்றும் பாரு பியான் கேட்டுக் கொண்டார். அது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது, செவ்வாய்க்கிழமை வான் ஜுனைடி கூறுகையில், அப்படி ஒரு சட்டம் உருவாக்கும் எண்ணம் எழவில்லை என்றும் இஸ்லாம் அல்லாத சமயங்களை ஒடுக்கும் வகையில் எதிர்காலத்தில் அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அரசுக்குத் எண்ணமில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, பிரதமர் துறையில் சமய விவகாரங்களுக்கான துணையமைச்சர் அமாட் மர்ஸுக்கி ஷாரி, ஷரியா சட்டம் சம்பந்தமாக 4 புதிய சட்டங்களை மத்திய அரசு வரைவதாகவும், அதில் இஸ்லாம் அல்லாத சமயங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமும் அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். அது பற்றி பாரு பியான் மேலும் கூறும்போது, இந்த விவகாரத்தில் சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி, பெர்சத்து ஆகியவை அணுக்கமாகக் கவனித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகேட்டுக் கொண்டார். இதனை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால், பிரதமரின் ‘மலேசிய குடும்பம்’ என்பது பயனற்று போவதோடு நாட்டில் சமய சகிப்புத் தன்மை பூண்டோடு அழியும் என்றும் அவர் நினைவுருத்தினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four × five =