முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களை புறக்கணிப்பது ஆரோக்கியமற்ற செயல்

0

இனம் – சமயத்தை வைத்து பொருட்களை புறக்கணிப்பு செய்வது ஓர் ஆரோக்கியமான செயல் அல்ல. அதுவும் பல இனங்கள் வாழும் நாட்டில் இது சரியானது அல்ல என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். ஒரு பொருள் தூய்மையானதா (ஹலால்) இல்லையா என்று பார்த்து வாங்குவது வேறு. ஆனால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பது, முஸ்லிம் தயாரிப்புப் பொருட்களை முதலில் வாங்குவது என்ற பிரசாரம் தவறானது. ஆரோக்கியமற்றது என்றார் அவர்.
ஒரு முஸ்லிம் என்ற முறையில் நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருட்களைத் தயாரிக்க வேண்டும். முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடிய பல பொருட்களை சீனர்கள் தயாரிக்கிறார்கள்.ஆனால் அவற்றை ஒதுக்கி வைப்பது பல இன சமூக அமைப்பில் மிகவும் ஆரோக்கிய மற்றது என்றார் அவர். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பது என்றும் முஸ்லிம்கள் தயாரிக்கும் பொருட்களை முதலில் வாங்குவது என்றும் பிரசாரம் வலைத்தளங்களில் தொடங்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கெனவே பிரதமர் துன் மகாதீர் உட்பட பலர் கண்டித்திருக்கிறார்கள்.
எனினும் பாஸ் கட்சி இதனை ஆதரிக்கிறது. இதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதார சக்தி மேலும் உயரும். அவர்களின் போட்டித்தன்மை மேலும் அதிகமாகிறது என்றும் கூறியிருக்கிறது.
இதனிடையே கட்சிக் கூட்டங்களை புறக்கணிக்கும் அஸ்மின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டபோது. அவர் புறக்கணிப்புச் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அவரை கலந்து கொள்ளுமாறு நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + fourteen =