முவா ஃபாக்காட் நேஷனலில் பெர்சத்து இணையக் கூடும்!

0

பெர்சத்து கட்சி முவா ஃபாக்காட் நேஷனலில் இணை யும் சாத்தியம் குறித்து பரிசீலிக் கப்படும் என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறினார். அம்னோ மற்றும் பாஸ் கட்சி கூட்டணியான முவா ஃபாக்காட் நேஷனலில் மற்றோர் இஸ்லாமிய கட்சியை இணைத்துக்கொள்வதில் ஆட்சேபம் எதுவும் இல்லை என்றார் அவர். பல ஆண்டுகாலமாக அம்னோ மற்றும் பாஸ் வெவ்வேறு திசையில் இயங்கி வந்துள்ளன. ஆனால் தற்போது தங்களுக் கிடையிலான கருத்து வேறு பாடுகளைக் களைந்து ஒரே கூட்டணியாக இயங்கி வருவ தாக கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான அவர் சொன்னார்.
இருப்பினும் பெர்சத்துவை முவா ஃபாக்காட் நேஷனலில் இணைத்துக் கொள்வது குறித்து அம்னோ மற்றும் பாஸ் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் தெரிவித்தார். நேற்று கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ நோர் இஸாம் டஹ்லானுடன் செலாயாங் பாசார் போரோங்கிற்கு வருகை புரிந்த போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இதனிடையே பெரிக்காத் தான் நேஷனல் அரசாங்கம் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப் மற்றும் துணை சபா நாயர் ஙா கோர் மேங் ஆகியோரை மாற்றும் முடிவு வழக்கமான ஒன்று என அவர் சொன்னார்.
இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் டான்ஸ்ரீ
முஹிடின் யாசின் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =