முவாஃபக்காட் நேஷனலில் பெர்சத்துவிற்கு இடமில்லை

முவாஃபக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்துவை ஓர் உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா வலியுறுத்தினார்.
தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ, அம்னோவில் இருந்து பிரிந்து சென்ற அக்கட்சிக்கும் ஒரு பங்கு இருப்பதாக அவர் சொன்னார்.
ஆகையால் முவாஃபக்காட் நேஷனலில் பெர்சத்து இணைவதை அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் விரும்பவில்லை என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
கடந்த 2018இல் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் 60 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட பக்காத்தான் ஹராப்பான் பங்காளிக் கட்சிகளான பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகளுடன் பெர்சத்து கூட்டுச் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் ஒரு சிறிய பாம்பான பெர்சத்து ஒரு மலைப்பாம்பான அம்னோவுடன் நட்புக் கொள்ள முயற்சிப்பதாக தெங்கு ரஸாலி வர்ணித்தார்.
இதனிடையே வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பிரதமரும் பெர்சத்து தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் பாகோ நாடாளுமன்றத் தொகுதியிலும் பெஜுவாங் அவைத் தலைவர் துன் மகாதீரை லங்காவி நாடாளுமன்றத் தொகுதியிலும் அம்னோ போட்டியிடும் என அவர் வலியுறுத்தினார்.
இவ்விரு நாடாளுமன்றத் தொகுதிகளும் அம்னோவிற்குச் சொந்தமானவை. வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பாகோ மற்றும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதிகளை நிச்சயம் அம்னோ கைப்பற்றும் என முன்னாள் நிதியமைச்சருமான் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே முஹிடினின் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஒரு சட்டப்பூர்வமான அரசாங்கம் அல்ல.
ஆகையால் நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என தெங்கு ரஸாலி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 15 =