முவாஃபக்காட் நேஷனலில் இணைய பெர்சத்துவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது!

0

முவாஃபக்காட் நேஷனலில் இணைய பெர்சத்து விண்ணப்பம் செய்துள்ளதாக அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடியின் அறிக்கையை பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ரெட்ஸுவான் முகமட் யூசோப் நிராகரித்தார்.
மாறாக அந்தக் கூட்டணியில் இணைய பெர்சத்துவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பிரதமர் இலாகா அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
முவாஃபக்காட் நேஷனலில் இணைய முஹிடின் ஒருபோதும் விண்ணப்பம் செய்தது கிடையாது. அந்த கூட்டணியில் இணையும்படி அழைப்புத்தான் விடுக்கப்பட்டது என்றார் அவர்.
ஆகையால் அம்னோ தலைவரின் அறிக்கையில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் இரவு அம்னோ – பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தியபோது முஹிடின் இணக்கம் தெரிவித்து விட்டதாக அவர்
குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 2 =