முற்றுகிறது அம்னோ பெர்சத்து மோதல்

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்காத அம்னோ உறுப்புக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள் என்று கூறிய ஷாஹிடான் காசிமை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஷாரிர் சாமாட்
ஷாஹிடான் காசிம் அவ்வாறு கூறியிருப்பது அபத்தம் என்றும் அதனை அவரது சுயநலத்துக்காகக் கூறுவதாக ஜொகூர்பாரு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாரிர் சாமாட் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலில் அவர் பிஎன்பிபிசியின் தலைவராக நியமிக்கப்பட்டதற்குத் தனது நன்றிக் கடனைத் தெரிவிப்பதற்காக அவர் அவ்வாறு கூறியிருப்பதாக ஷாரிர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பட்ஜெட்டை ஆதரிக்காதவர்கள் மீது யாரும் இவ்வாறு வசைபாடி குற்றம் சாட்டியிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி பெரிக்காத்தான் நேஷனலில் இணையவில்லை. ஆயினும், ஷாஹிடான் காசிம் தேசிய முன்னணியின் ஆதரவாளர் கிளப்பின் தலைவர் என்று முடி சூட்டிக் கொள்ளலாமா என்றும் ஷாரிர் கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று ஷாஹிடான் காசிம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போ து, பட்ஜெட்டை ஆதரிக்காதவர்கள் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைப்பவர்கள் என்று குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =