முப்பெரும் தமிழர் திருவிழாவில் அபார திறமைகளை வெளிப்படுத்திய தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

0

தமிழர் திருநாளை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை நிஜமாக்கும் வகையில் மலேசியர் தமிழர் சங்கம் பேராக் கிளையின் செயலாளர், ஏற்பாட்டுக் குழுத் தலைவர், பி.கே.குமார் புந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா, மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, திருக்குறள் மனனப் போட்டிகள் என பல அங்கங்களை நடத்தினார்.
அப்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பொங்கல் வைப்பது தொடங்கி, தோரணம் பின்னுதல், உறியடித்தல், பூ கட்டுதல், தாயம், பல்லாங்குழி, கரும்பு சுவைத்தல் என அனைத்துப் போட்டிகளிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.
கலை- மொழி- பண்பாடு- கல்வி- பொருளாதாரம், விளையாட்டு என அனைத்துத் துறைகளையும் சார்ந்து அவ்விழா சிறப்பாக நடைபெற, அவ்விழாவில் இன்ஃபோ ஜெயா கல்வி நிலையம், தொழில் முனைவர் நிர்வாக மையம், ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம், சங்க மன்றங்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் ஒத்துழைப்பு வழங்கினர்.
கதை சொல்லும் போட்டியாக இருக்கட்டும், திருக்குறள் மனனப் போட்டியாக இருக்கட்டும். மாணவர்கள் சிறந்த படைப்பினை வெளிப்படுத்தி, அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
இதனிடையே, அந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், பி.கே.குமார் பேசுகையில் 1921-ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் அறிஞர்கள் ஒன்று கூடி பொங்கல் திருநாளை திருவள்ளுவர் புத்தாண்டாக பிரகடனப்படுத்தினர். அந்த வகையில் இந்த முப்பெரும் விழா தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழ் மொழி உயர்ந்த நிலையில் காணப்பட்டு வருவதுடன், நம்முடைய பிள்ளைகளும் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர். பொங்கல் விழாவிலும் சரி, பண்பாட்டு விளையாட்டுகள், என போட்டிகளில் 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். அந்த வகையில் பெற்றோர்களுக்கும், இந் நிகழ்வினை நடத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்றார். இப்போட்டிகளை நடத்த இடம் கொடுத்து உதவிய புந்தோங் மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தினருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் நன்றியை சமர்ப்பித்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + fifteen =