முன்னாள் மந்திரி பெசாருக்கு பக்கவாதத் தாக்குதல்

ஜொகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் தமது வீட்டில் நேற்று காலையில் பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளானார். கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ்மான், பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளானவுடன் தனியார் மருத்துவ மனையொன்றுக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்று பெர்சத்து கட்சியின் ஜொகூர் மாநிலத் துணைத் தலைவரான முகமட் நஸீர் தெரிவித்தார். காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் அவருக்கு பக்கவாதத் தாக்குதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று நஸீர் குறிப்பிட்டார்.  மேலவைக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டிருந்த வேளையில், அதிர்ச்சிக்குரிய அத்தகவல் தமக்கு கிடைத்தது என்று மேலவை உறுப்பினர் நஸீர் கூறினார். கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையொன்றுக்கு ஒஸ்மான் விரைவில் கொண்டு செல்லப்படுவார் என்று பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சே ஜக்காரியா முகமட் சாலே தெரிவித்தார். அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + one =