
ஒரு வணிகரிடமிருந்து லஞ்சம் பெற்ற ஆறு குற்றத்திற்காக முன்னாள் நீதிமன்ற ஆணை யருக்கு 58 வருட சிறைத் தண்ட னையும் 1.05 மில்லியன் வெள்ளி அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 72 மாதச் சிறையும் செஷன்ஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
எனினும், கோலாலிப் பிஸ் மற்றும் ரவூப் நீதி மன்ற ஆணையரான முகமட் அமின் சாகுல் ஹமிட் (41) தனது சிறைத் தண்டனையை 12 ஆண்டுகள் அனுபவித்தாலே போதும் என்று கூறப்பட்டது காரணம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி டத்தோ அகமட் ஸம்சானி முகமட் ஸயின் எல்லா குற்றங்களுக்கும் ஒரு சேர தண்டனையை அனுபவிக்கும் வகையில் தீர்ப்பினை அளித்தார். இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மேல்முறையீட்டினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏதுவாக 50,000 வெள்ளி பிணைப்பணத்துடன் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.