முன்னாள் டிபிகேஎல் துணை இயக்குநர் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்

0

கோலாலம்பூர் நகராண்மைக் கழக முன்னாள் துணை இயக்குநர் ஷாபுடின் முகமட் சாலே 6 கையூட்டு வழக்கு குறித்து இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.
கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் முன்னாள் பொது பொறியியல் மற்றும் போக்கு வரத்து இலாகாவின் துணை இயக்குநரான இவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2009 இன் கீழ் உள்ள குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என எம்ஏசிசி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு லட்சம் வெள்ளியை அம்பாங்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்டதாக எம்ஏசிசி குறிப்பிட்டுள்ளது.
தகவல், தொலைத் தொடர்பு குத்தகை ஒன்று பேரம் பேசிய பின்னர் 200,000 வெள்ளிக்கு அதனை விற்றுள்ளார் என ஊடக செய்தி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − five =