முன்னாள் உறுப்பினர்கள் சந்திப்பு; விசாரணை நடத்தப்படும்

0

நேற்று முன்தினம் முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் நடத்திய ஒரு சிறப்புக் கூட்டம் குறித்து போலீஸ் மற்றும் போலீஸ் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.
இந்தச் சந்திப்பு விதிமுறைக்கு ஏற்ப நடத்தப்பட்டதா?, இந்தச் சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து போலீஸ் மற்றும் போலீஸ் சிறப்புப் பிரிவு முழுமையாக விசாரணை நடத்தும் என்றார் அவர்.இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதற்கு முன்னர் விசாரணை அறிக்கைக்காக அமைச்சு காத்திருக்கும் என அவர் சொன்னார்.
தமக்குத் தெரிந்தவரை இதற்கு முன்னர் இது போன்ற கூட்டம் நடத்தப்பட்டது கிடையாது. பொதுமக்களுக்கும் இது குறித்து தகவல் தெரியாது என அவர் குறிப்பிட்டார்.
‘ஹட் யாய்’ ஒப்பந்தத்தை நினைவுகூர்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதா அல்லது கம்யூனிஸத்தைப் புதுப்பிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதா என்ற அம்சங்களும் ஆராயப்படும் என முஹிடின் தெரிவித்தார்.
மலேசியா ஓர் அமைதியான நாடு. ஆகையால் இந்த விவகாரத்தில் மிக விழிப்புடன் உள்துறை அமைச்சு செயல்படும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here