முன்னாள் அமைச்சர் ஸாய்ட் எழுதிய புத்தகத்திற்கான தடை நீக்கம்!!

0

முன்னாள் அமைச்சர் ஸாய்ட் இப்ராஹிம் எழுதிய புத்தகம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உள்துறை அமைச்சு நேற்று நீக்கியது.
’அஸ்ஸலாமு அலைக்கும் என்ற தலைப்பில் அவர் எழுதிய அந்தப் புத்தகம் பிரதமர் துன் மகாதீரால் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனினும் அப்போது இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் இது பொதுநலனுக்கு பாதிப்பை விளைவிக்கலாம் என்று கூறி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதைத் தடை செய்தது.
அவர்கள் சொல்லும் காரணம் மிக அபத்தமானது என்று அப்போது ஸாய்ட் கூறியிருந்தார். தடை நீக்கப்பட்டது குறித்து பேசிய ஸாய்ட், இது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அரசாங்கம் புத்தகங்களைத் தடை செய்யக்கூடாது என்று வெளிவந்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் எழுதத் தூண்டுகிறது. 50 ஆண்டுகால தவறான பொருளாதார வழிகாட்டல் பற்றி ஒரு புத்தகம் எழுத நினைக்கிறேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − fifteen =