முனீஸ்வரர் ஆலயத்தை கொளுத்திய மனநோயாளி

கெடா குபாங் பாசு பாயா கமுண்டிங் தோட்டத்தில் பிரதான வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை மன நோயாளி ஒருவர் கொளுத்தி சேதப்படுத்தியுள்ளார்.நேற்று காலையில் இந்த ஆலயத்திற்குள் நுழைந்த அவர், இந்தச் செயலைப் புரிந்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அந்நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையின் போது அவர் ஒரு மன நோயாளி என உறுதி செய்யப்பட்டது. இந்த வட்டாரத்தில் ஐயா ஆலயமாக இது விளங்கி வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 6 =