முதுமைக் காலத்தில் பெற்றோரை தவிக்கவிட்டால் 6 மாதம் சிறை

0

முதுமை காலத்தில் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு, 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர உள்ளது.

குழந்தைகளாக இருக்கும் போது தங்களை கஷ்டப்பட்டு ஆளாக்கிய பெற்றோர்களை வயதான காலத்தில் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்கிறது. ஆனால் நன்றியுணர்வும் மனசாட்சியும் இல்லாத ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை வயதான காலத்தில் தவிக்க விட்டு விடுகின்றனர்.

ஆயிரம் கனவுகளுடன் வளர்த்த பிள்ளைகள் வைவிடும் போது தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் பெற்றோர் ஆளாகின்றனர். ஒரு சிலர் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்து சமூக நலம் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது. அதன்படி நடைமுறைக்குட்பட்ட, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007இல் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டவரைவை தயாரித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி வயதான பெற்றோர்களை கவனிக்காமல் தவிக்க விடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும்.

இந்த தண்டனை காலத்தை 3 மாதத்திலிருந்து 6 மாத காலமாக அதிகரிக்க புதிய வரைவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்டவரம்புக்குள் வரும் நிலையில் புதிய சட்டவரைவின்படி, தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோரும் சட்ட வரம்புக்குள் வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தின் படி பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையாக ரூ 10,000 வரை வழங்கலாம். இந்த வரம்பும் நீக்கப்பட்ட பிள்ளைகள் அதிகம் சம்பாதிக்கும் பட்சத்தில் பெற்றோருக்கு  கூடுதல் தொகையை பராமரிப்பு செலவுக்கு தரவும் சட்டத்தில் திருத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here