‘முதியோரின் அறிவுரையைக் கேட்கவும்’ பின்லாந்து பிரதமருக்கு மகாதீர் ஆலோசனை

0

94 வயதுடைய உலகத்தின் வயது முதிர்ந்த பிரதமரான துன் டாக்டர் மகாதீர் முகமது, 34 வயதான உலகத்தின் இளம் பின்லாந்து பிரதமர் சாநாமாரினுக்கு வழங்கும் அறிவுரை.
‘ வயது முதிர்ந்தவர்களிடம் அறிவுரை கேளுங்கள். அது ஒரு நல்ல பழக்கமாகும்’
இளம் தலைமுறையினரின் லட்சியங்களின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எனினும் வயது முதிர்ந்தவர்களின் அனுபவத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமாகும் என்று செவ்வாய்க்கிழமை உலகச் செய்தி நிறுவனமான ராய்ட்டர்சுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் அது நன்மையைக் கொண்டு வரும்’ என்று மகாதீர் கூறினார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தொடர்ந்து பின்லாந்தின் பிரதமர் அன்டி ரின்னி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
நாட்டின் பெரிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே வேட்பாளராக மாரின் திகழ்கிறார்.
27 ஆம் வயதில் அவரின் சொந்த நகரமான தாண்பேரியில் நகராட்சி மன்றத் தலைவராக மாரின் தேர்வு செய்யப்பட்டார்.
அதிலிருந்து பின்லாந்து அரசியலில் மாரின் பிரகாசிக்கத் தொடங்கினார்.
நாட்டின் பெரிய கம்பெனிகள் தங்களின் மூன்று நாள் வேலை நிறுத்தத்திற்கிடையே மாரின் பதவியேற்க இருக்கிறார். திங்கள்கிழமை அன்று அவ்வேலை நிறுத்ததும் தொடங்கியது. கடந்த வருடம் மே மாதம் பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகாதீர் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார்.
அதற்கு முன் 1981 லிருந்து 2003 வரை 22 வருடங்களுக்கு மலேசியாவின் பிரதமராக மகாதீர் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =