முதல் வருடத்தில் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அசத்திய நிறுவனம்

0

ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் என எதிர்பார்ப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்தியாவில் மே 2018 இல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் அசத்திய ரியல்மி பிராண்டு இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் பிராண்டுகளுக்கு போட்டியாளராகவும் பார்க்கப்படுகிறது.

ரியல்மி 5எஸ்

தற்போதைய நிலவரப்படி மூன்றாவது காலாண்டு வாக்கில் ரியல்மி பிராண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. விவோ மற்றும் ஒப்போ போன்று இல்லாமல் ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் கணிசமான வரவேற்பினை துவக்கம் முதலே பெற்று வருகிறது.
எனினும், ஒப்போ மற்றும் விவோ பிராண்டுகள் ஆஃப்லைன் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. சர்வதேச அளவில் வேகமாக வளர்ச்சி பெறும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ரியல்மி பிராண்டு ஏழாவது இடத்தில் இருப்பதாக ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் துவங்கப்பட்ட ரியல்மி நிறுவனம் தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 20 நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரியல்மி பிராண்டு மொத்தம் ஒரு கோடி ஸ்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 8 =