முதல் மலேசியருக்கு கொரோனா வைரஸ்

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பதற்றத்தைத் தொடர்ந்து நாட்டில் மலேசியர் ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் கூறினார். 41 வயதுடைய திருமணமாகாத அந்நபர், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என நேற்று இங்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

வியாபார நோக்கத்திற்காக கடந்த ஜனவரி 16 முதல் 23ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குச் சென்றிருந்த இவர், நாடு திரும்பியதும் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக சிலாங்கூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைக்காகச் சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்நபர் சிங்கப்பூரில் இருந்த போது சீனா உட்பட அனைத்துலகப் பேராளர்களுடன் சில கூட்டங்களில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் சுங்கைபூலோ மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப் பட்ட வார்டில் அந்நபர் சிகிச்சை பெற்று வருவதாக ஸுல்கிப்ளி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + thirteen =