முதலாளிகள் இல்லாதபோது நகராண்மைக் கழகம் அபராதம் வழங்குவது தவறு

0

முடிதிருத்தும் நிலையங்களில் அதன் உரிமையாளர்கள் எந்நேரமும் கடையில் இருப்பது சாத்தியம் இல்லை. முடிதிருத்தும் நிலையங்களில் அதன் உரிமையாளர் இல்லாத நிலையில் அக்கடைக்கு நகராண்மைக் கழகம் அபராதம் வழங்குவது தவறாகும். கடை நடத்துபவர்கள் எப்போதுமே கடையிலேயே அமர்ந்திருப்பது சாத்தியப்படாது. தங்களின் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அவர்கள் ஒரு கடை மட்டுமே வைத்திருப்பதும் முறையல்ல. அத்தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும்; அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை கொள்கை எண்ணமாகும்.
அதற்கு ஏற்ப முடிதிருத்தும் கடை உரிமையாளர்களும் தாங்கள் நடத்தி வருகின்ற ஒரு கடையில் அதன் கடன்கள் அனைத்தும் தீர்ந்த பிறகே மற்றொரு கடையை தொடங்க வேண்டும், அதுவே முறையாகும்.
அந்த சூழ்நிலையில் அவர்கள் ஒரே கடையில் அமர்ந்து அதை கண்காணித்து வழி நடத்துவது சிரமம்.
அந்தச் சூழ்நிலையில் அவர்கள் பணிக்கு வேலையாட்கள் வைப்பது தான் முறையாகும்.
இந்த வேலைக்கு உள்நாட்டுத் தொழிலாளர்கள் கிடைக்காத காரணத்தினால் இத்தொழிலை நடத்துவதற்கு இந்தியாவிலிருந்து வேலை ஆட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கின்றது. அதில் எவ்வித தவறும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
அக்கடைகளில் உரிமையாளர் இல்லை என்பதற்காக மாநகராட்சி மன்றம் சம்மன் கொடுத்து அதற்கு அபராதம் விதிப்பது முறையல்ல. அது கண்டிக்கப்பட வேண்டும் என மலேசிய இந்திய முடிதிருத்தும் சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்த போக்கினை மாநகர் மன்றம் மேற்கொண்டது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 2 =