முதலமைச்சர் பதவியில் இருந்து அட்லி விலகினார்

அட்லி ஸஹாரி மலாக்கா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மலாக்கா சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று முன்தினம் மலாக்கா ஆளுநர் துன் காலில் யாக்கோப்பைச் சந்தித்து தமது இந்த முடிவைத் தெரிவித்ததாக அட்லி ஸஹாரி சொன்னார்.

மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும்படி மலாக்கா ஆளுநருக்கு தாம் பரிந்துரை செய்ததாகவும், தமது இந்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார். கடந்த வாரம் பெர்சத்து கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது. தமது அரசாங்கம் பெரும்பான்மை இழந்தது ஏன் என்பது குறித்து மக்களுக்குத் தாங்கள் விளக்கம் தரவிருப்பதாக அட்லி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − two =