முடி திருத்தும் கடையில் மதுபான விற்பனை: மாநகர் மன்றம் நடவடிக்கை

இங்கு, பண்டார் சௌஜானா புத்ரா வட்டாரத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் உட்பகுதியில் பொதுமக்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து வந்த அதன் உரிமையாளரின் நடவடிக்கையை கோல லங்காட் மாவட்ட மன்ற அமலாக்க அதிகாரிகள் முறியடித்தனர்.
நேற்று முன்தினம் (18.9.2020) அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் மதுபானப் புட்டிகளையும் ஒரு குளிர்சாதனப் பெட்டியையும் மாவட்ட மன்ற அதிகாரிகள் கைப்பற்றி லோரியில் ஏற்றிச் சென்றனர். அந்த நபருக்கு சமான் வழங்கியதுடன், விபாரச் சட்டம் 38(1) யுயுகே பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமலாக்க அதிகாரி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 2 =