முடிவெட்ட அதிகக் கட்டணத்தை விதிப்பதா? 633 சம்மன்கள் வெளியீடு

முடிவெட்ட அதிகக் கட்டணம் வசூலித்த குற்றத்திற்கு விளக்கம் தருமாறு 633 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன.நாடு முழுமையும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், சில சிகையலங்கார நிலையங்கள், குறிப்பிட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது கண்டறியப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் துறை துணையமைச்சர் ரோசோல் வாஹிட் தெரிவித்தார். கடை உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட காரணம் கோரும் சம்மன்களுக்கு சம்பந்தப்பட்ட நிலையங்கள் 3லிருந்து 5 நாள்களுக்குள் தகுந்த பதிலளிக்க வேண்டும். தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
தற்போது முடி வெட்டுவதற்கான செலவு சிறிது கூடியிருக்கிறது. வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் ஏற்புடையதாகவும் வாடிக்கையாளர்களுக்கு சுமையில்லா மலும் இருக்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.
முடிவெட்டுபவரின் கையுறை மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலுக்கு மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − two =