முக்ரிஸ் இரண்டாவது துணைப் பிரதமர்; நான் பரிந்துரைக்கவில்லை

புத்ராஜெயாவை பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் கைப்பற்றினால் துணைப் பிரதமர் வேட்பாளர் முக்ரிஸ்தான் என்ற பரிந்துரையை தாம் செய்யவில்லை என லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் தெளிவுபடுத்தினார்.
“எனது மகன் இரண்டாவது துணைப் பிரதமர் என பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து பலர் குறைகூறியுள் ளதை நான் அறிவேன்” என முன்னாள் பிரதமருமான அவர் சொன்னார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள்தான் இரண்டாவது துணைப் பிரதமர் பதவிக்கு முக்ரிஸை பரிந்துரைத்தனர்.
அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூட்டறிக்கை ஒன்றில் முக்ரிஸின் நியமனம் குறித்து அறிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
“எனக்கு இந்த விவகாரத்தில் உடன்பாடு இல்லை. நான் முதன் முறையாக பிரதமர் பதவியேற்ற போது எனது பிள்ளைகள் தீவிர அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தேன்” என வலைத்தளம் ஒன்றில் மகாதீர் பதிவேற்றம் செய்திருந்தார்.
“நான் இப்போது பிரதமராக இல்லை. ஆகையால் என் பிள்ளைகள் அரசியலில் இணையலாம். வெற்றி, தோல்வி என்பது அவர்களைப் பொறுத்தது” என்றார் அவர்.
“ஒரு குறிப்பிட்ட பதவிக்கு முக்ரிஸின் பெயரை பரிந்துரைத்தபோது எனது சுயநலத்திற்காக அதை எதிர்ப்பது சரியல்ல” என மகாதீர் தெரிவித்தார்.
“என் விளக்கத்தை நம்புவதா, இல்லையா என்பது மக்களைப் பொறுத்தது” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seven =