முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் டோனி- தவான்

0

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் மிகப்பெரிய விவாதமாக இருப்பது டோனி எப்போது  ஓய்வு பெறுவார் என்பது தான். அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டங்களில் டோனி இடம்பெறவில்லை. சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டங்களிலும் டோனி இடம்பெறவில்லை. 
ஓய்வு முடிவு குறித்து இதுவரை எங்களிடம் டோனி எதுவும் கூறவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருமுறை தெரிவித்தார். நான் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள் என டோனியே ஒரு முறை வெளிப்படையாக கூறியிருந்தார். 
ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக ராணுவ பணிகளில் ஈடுபட்டார். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் உள்ள 106 டிஏ பட்டாலியன் அணியில்  சேர்ந்து டோனி ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்நிலையில், டோனியின் ஓய்வைப் பற்றி அவரே முடிவு எடுப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் தெரிவித்துள்ளார்.
“டோனி நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார், அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். இது அவருடைய முடிவாக இருக்க வேண்டும். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணிக்காக இன்றியமையாத தருணங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். நேரம் வரும்போது அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன். அணியின் ஒவ்வொரு வீரரின் திறனையும் மேம்படுத்துவதில் டோனியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை” என தவான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 1 =