முகமட் அரிப், ஙா பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்

0

மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் யூசோப் மற்றும் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் தங்களுடைய பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற தேர்தல் கண்காணிப்புக் குழு பெர்சேவின் கோரிக்கையை உயர்மட்ட ஊழியர்களின் முன்னாள் குழுவான ஜி25 வரவேற்றுள்ளது.
முகமட் அரிப் யூசோப்பை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என ஜி25 அறிக்கை ஒன்றில் கூறியது.
பதவிக்காலத்தில் சபாநாயகர் என்ற நிலையில் தமது கடமையை பாகுபாடின்றி முகமட் அரிப் ஆற்றி வந்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய சவால்களில் இருந்து மக்கள் இன்னும் மீளமுடியாமல் இருந்து வருகின்றனர்.
மேலும் நாடாளுமன்றம் முறையாக இயங்கவில்லை என்பதில் மக்கள் கலக்கமுடன் இருந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற சபாநாயகரை நீக்கம் செய்வது நியாயமற்ற ஒன்று. அதே வேளையில் இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை களுக்கு தடங்கல் ஏற்படலாம் என அந்த அறிக்கை தெரிவித்தது.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப் பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை நிராகரிக்க வேண்டும் என ஜி25 வலியுறுத்தியது.
அரிப் மற்றும் ஙாவை நீக்க கடந்த ஜூன் 26ஆம் தேதி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + fourteen =