முகக்கவசம் 70 காசாக விலை குறைப்பு

  3 அடுக்குத் துணிகளைக் கொண்ட முகக்கவசத்தின் விலை 70 காசாகக் குறைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி அறிவித்தார்.
  இந்தப் புதிய விலையானது நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர், ஆகஸ்டு 1ஆம் தேதி, அதன் விலை ஒரு ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  கோவிட்-19 மீட்பு நடவடிக்கைக் காலத்தில் பல இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. கூடல் இடைவெளி அனுசரிக்க முடியாத இடங்களில் முகக்கவசம் நோய்த் தடுப்புக்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
  கோவிட்-19 நோயைத் தடுக்க முகக்கவசம் கட்டாயமாக அணிவது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருந்தார்.
  அதனை அணியாதோருக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  eighteen + eight =