மீண்டும் பெஜுவாங் நிகழ்ச்சியில் ஒஸ்மான் சாப்பியான்

பெர்சத்து கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் நேற்று நடந்த பெஜுவாங் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அண்மையில் சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது துன் மகாதீரின் புதிய கட்சியான பெஜுவாங் வேட்பாளரை ஆதரித்து ஒஸ்மான் சாப்பியான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பில் அவர் பெர்சத்துவில் இருந்து நீக்கப்பட்டதாக பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்தது. சிறிது நேரத்திற்குள் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜொகூர் பெஜுவாங் தேர்தல் பிரசார அறிமுக விழாவில் ஒஸ்மான் சாப்பியான் கலந்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பெஜுவாங் தலைவர்களுடன் ஒஸ்மான் சாப்பியான் ஒன்றாகக் காணப்படும் புகைப்படத்தை
துன் மகாதீரின் அரசியல் செயலாளர் அபுபாக்கார் யாஹ்யா முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
ஜொகூர் மாநில முன்னாள் மந்திரி பெசாரான ஒஸ்மான் சாப்பியான் மாநில பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறார்.
ஜொகூர் மாநில சட்ட மன்றத்தில் உள்ள 56 இடங்களில் 29 இடங்களை பெரிக்காத்தான் நேஷனலும் 27 இடங்களை பக்காத்தான் ஹராப்பானும் கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 18 =