மீண்டும் பிரதமராகுங்கள்; ஜசெக வலியுறுத்து

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் பதவியை மகாதீர் துறந்த நிலையில், அப்பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டும் என்று ஜசெக கோரிக்கை முன்வைக்கிறது. தமது பதவி துறப்புக் கடிதத்தை மகாதீர் மாமன்னரிடம் ஒப்படைத்த பிறகு, இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று காலையில் மகாதீர் வீட்டில் சந்தித்த பிறகு, அவரின் பதவி விலகல் குறித்து தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

நேற்று திட்டமிடப்பட்டிருந்த பக்காத்தான் கட்சிகளின் தலைவர்கள் மாநாடு, இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்தச் சந்திப்பில், மகாதீர் தமது பிரதமர் பதவி துறப்பை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று ஜசெக வலியுறுத்தப் போவதாக, அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =