
அரசியலில் மீண்டும் தீவிரமாக ஈடுபடப் போவதாக பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி நேற்று அறிவித்தார். பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். நடுநிலை வாக்காளர்களைக் கவர முடியாமல் ‘மூன்றாம் தரப்பு’ கட்சியாகவே பிகேஆரும் பக்காத்தான் ஹராப்பானும் தொடர்ந்து நீடித்து வருமானால், எதிர்காலத்தில் முற்போக்கான, பல்லின அரசியலை உருவாக்கும் லட்சியத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ரபிஸி எச்சரித்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, ஏப்ரல் மாதம் நடைபெறும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் உறுதிப்பாட்டுடன் மீண்டும் தீவிர அரசியலில் பிரவேசிக்கிறேன் என்று பண்டான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸி குறிப்பிட்டார்.