மீண்டும் ஓரினப் புணர்ச்சி புகாரா?

நாட்டில் பிரபல எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி புகார் செய்யப்பட்டுள்ளது. இதை கேட்டு எனக்கு சலித்து விட்டது என்று தேசியப் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார்.
இதுபோன்ற புகார்கள் தொடர்பிலான விசாரணை விரயமான ஒன்றாகும் என்று அவர் சாடினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பின்னணியாக இருக்கும் எழுத்துப்பூர்வமான சத்திய பிரமாண வாக்குமூலத்தை பதிவுசெய்த அதிகாரியிடம் புக்கிட் அமான் போலீஸ் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
உண்மையில் இந்தப் புகார் போலீசாரின் நேரத்தை விரயமாக்கும் செயல் என்று அவர் சாடினார்.
இப்படி ஒரு குற்றச்சாட்டை கேட்டுக் கேட்டு எனக்கு சலித்துவிட்டது. எனினும், போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த சத்திய பிரமாண வாக்குமூலத்தை வெளியிட்ட நபரிடம் குற்றப்புலனாய்வுத்துறை வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, இது தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் பொதுமக்கள் ஆரூடங்களை வெளியிடுவதை தவிர்க்கும்படி புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குனர் டத்தோ மியோர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =