மீண்டும் ஒரு பேரணி என்ற அச்சத்தில் பிரிக்பீல்ட்ஸில் பலத்த பாதுகாப்பு

0

பிரிக்பீல்ட்ஸில் ஜாவிக்கு எதிராக நேற்று முன்தினம் இந்திய மக்கள் திரண்டு அமைதியாக தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்திய நேரத்தில், நேற்று சனிக்கிழமை மீண்டும் அங்கு ஸக்கீருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல் வந்தது.
வலைத்தளங்களிலும் இந்தச் செய்தி பரப்பப்பட்டது. எனினும் இந்தப் பேரணியைத் தவிர்க்குமாறு காவல்துறையோடு கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அங்கு பேரணி நடக்கவில்லை.
சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு நிறுத்தப்பட்டு பல சாலைகள் அங்கு மூடப்பட்டிருந்தன. எனினும் இந்தப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ளாமல் அதை தவிர்த்ததற்கு தாம் நன்றி சொல்வதாக கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் மஸ்லான் நஸீம் கூறினார்.
சட்டத்தை மதித்து நடந்து கொண்ட மக்களுக்கு என் நன்றி. அமைதி, பாதுகாப்பை மீறாத எந்தச் செயல்களும் வேண்டாம் என்றார் அவர்.
ஸக்கீர் விவகாரம், ஒருதலைப்பட்ச மதமாற்று விவகாரம், நாடற்ற பிரஜைகள் விவகாரம், ’மித்ரா நிதி விவகாரம் போன்றவற்றை முன்னிறுத்தி இந்தப் பேரணி நடப்பதாக இருந்தது. எனினும் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்தியர்களையும் சீனர்களையும் அவமதித்துப் பேசிய ஸக்கீரை பேசக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + seven =