மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் புரோட்டோன் நிறுவனம்

0

கோவிட்-19 தொடர்பில் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருந்து வந்த வாகனத் துறைகள் மீண்டும் சுமுக நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.
நாட்டின் வாகனத் துறையில் புகழ்பெற்ற புரோட்டோன் ஜூன் மாதத்தில் மட்டும் 9,623 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.
கோவிட்-19 தாக்கத்தினால் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைத் தொடர்ந்து விற்பனைகள் ஏதும் இல்லாத நிலையில் இம்மாதம் மட்டும் புரோட்டோன் நிறுவனம் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது என்று புரோட்டோன் நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 4,447 புரோட்டோன் சாகா கார்கள் விற்பனையாகின. இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் அதிக அளவிலான கார்கள் (4275 கார்கள்) விற்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஜூன் மாதத்தில் அதிக அளவிலான கார்கள் விற்கப்பட்டிருக்கின்றன.
அரசாங்க பொருளாதார ஊக்குவிப்பு நிதிகள், கடந்த சில மாதங்களாக கார்களுக்கான தேவைகள் முடங்கிக் கிடந்தது ஆகியவையே திடீர் கார் விற்பனை உயர்வுக்குக் காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இதன் காரணமாக புரோட்டோன் நிறுவனத்தின் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மொத்த வாகன விற்பனை சந்தையில் 66.4 விழுக்காட்டை உள்நாட்டுக் கார்கள் கைப்பற்றின என்றும் புரோட்டோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புரோட்டோன் சாகா வகை கார் அறிமுகம் கண்டு 35ஆவது ஆண்டு நிறைவு காணும் நிலையில் தொடர்ந்து அந்தக் காருக்கான தேவையும் வரவேற்பும் அதிகமாகவே இருந்து வருகிறது.
2020 ஆண்டின் முதல் அரையாண்டில் மற்ற எல்லா கார்களை விட புரோட்டோன் எக்ஸ் 70 அதிக அளவில் விற்பனையாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 4 =