மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போர் !!

0

சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, கூட்டத்திற்கிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரை முன்வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது. போர் நடைபெற்றால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் புரிந்து கொள்ளும்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் மிஷெல் பேஷ்லெட்டை சந்தித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளின்கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து உண்மை நிலவரத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அழைப்பை ஏற்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து நிலவரத்தை பார்வையிட மிஷெல் பேஷ்லெட்டும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.
தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வைத்து பார்த்தால் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண பன்முக அமைப்பு அல்லது 3வது தரப்பின் மத்தியஸ்தம் தேவைப்படலாம் அந்தப் பணியை அமெரிக்கா செய்யும் பட்சத்தில் அது முக்கியத்துவம் பெறும். ஏனெனில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது என்று அவர் கூறினார்.
இதனிடையே ரஷ்யா டுடேக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ’பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரிப்பதற்கு பதிலாக பாகிஸ்தான் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். இதனால் நாங்கள் 70,000 மக்களை இழந்துள்ளோம். நூறு பில்லியன் டாலர்களை பொருளாதாரத்தில் இழந்தோம். இறுதியில் ஆப்கானிஸ்தானில் வெற்றிபெறவில்லை என்று நாங்கள் அமெரிக்கர்களால் குற்றம் சாட்டப்பட்டோம். இது பாகிஸ்தானுக்கு மிகவும் நியாயமற்றது என்று நான் உணர்ந்தேன் என்று கூறினார்.
பாகிஸ்தான் மண்ணில் பிறந்து, ஆப்கானிஸ்தானில் ’ஜிஹாத் நடத்துவதற்கு அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதை இம்ரான் கான் ஒப்புகொண்டார்.
அக்டோபரில் நடைபெறவுள்ள பாரீஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) கூட்டத்திற்கு முன்னதாக இம்ரான் கானின் இந்த கருத்துகள் தற்காப்பு நடவடிக்கையாகத் தெரிகிறது. அடுத்த மாதம் பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்தும் பாகிஸ்தான் செயல் திட்டம் குறித்த இறுதி மதிப்பீட்டு அறிக்கையை கண்காணிப்புக்குழு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், குஹகூகு-ன் பிராந்திய இணை ஆசிய-பசிபிக் குழு (ஹஞழு) பாகிஸ்தானை மேம்பட்ட விரைவான பின்தொடர்தல் பட்டியலில் சேர்த்தது. இது பணமதிப்பிழப்பு எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத கட்டமைப்பின் எதிர் நிதியளிப்பு மற்றும் செயல்படுத்துவதில் பெரும் குறைபாடுகளைக் கொண்ட நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here