மீடியாக்களின் விமர்சனங்கள் ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம்: டோனி பயிற்சியாளர் சொல்கிறார்

எம்.எஸ். டோனி சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற இருந்தது. அதன்பின் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது.
இதனால் டி20 உலக கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் – நவம்பரில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. டி20 உலக கோப்பை 2021-ல் இந்தியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளதால் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆனால், ஓய்வு குறித்து எம்.எஸ். டோனி ஏதும் கூறவில்லை. இந்நிலையில் டோனி சிறுவனாக இருந்தபோது அவருக்கு பயிற்சியாளராக இருந்த கேசவ் ரஞ்சன் பானர்ஜி மீடியாக்களின விமர்சனங்கள் ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேசவ் ரஞ்சன் பானர்ஜி கூறுகையில்  ‘‘மீடியாக்களில் 2019 உலக கோப்பைக்குப் பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப முடியும் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.
இதுதான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்குமா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால், இந்த முடிவில் அதுவும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம். டோனியால் மட்டுமே அதுகுறித்து விளக்கம் அளிக்க முடியும்.
டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கனும். அடுத்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பையில் விளையாடியிருக்கலாம். அவரது உடற்தகுதியை பொறுத்தமட்டில் எளிதாக விளையாடலாம். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. ஏராளமானோர் இதைத்தான் நினைத்தார்கள்.
எல்லாம் முடிந்து விட்டது. இது அவரது ஓய்வு பேரிடியாக உள்ளது. அதேவேளை உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 5 =