மிருகக்காட்சி சாலையில் 2 சிங்கங்கள் தாக்கி பெண் ஊழியர் படுகாயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகே மிருகக்காட்சி சாலையில் 2 சிங்கங்கள் தாக்கியதில் பெண் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஷோல்ஹேவன்(Shoalhaven) மிருகக்காட்சிசாலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூண்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 35 வயது பெண் ஊழியர், அங்கிருந்த சிங்கங்கள்  தாக்கியதில் கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதே மிருகக்காட்சி சாலையில் 2014 ஆம் ஆண்டு முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதில் பராமரிப்பாளர் காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =