மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

0

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 
ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.  தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என முதல்கட்டமாக தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − two =