மியன்மாருக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை!

மியன்மாரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருப்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடினார். அதோடு அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் எச்சரித்தார். மியன்மார் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான Aung San Suu Kyi ஆங் சான் சூ கி மற்றும் அந்நாட்டின் இதர அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிபதை கடுமையாக கண்டனம் தெரிவித்த ஜோ பைடன் அந்த தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ராணுவத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என ஜோ பைடன் வருணித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 16 =