மித்ரா வழி பயன்பெற்றவர்களின் பட்டியலை புள்ளி விவரமாக வெளிப்படுத்துவது முக்கியம்

இந்தியர்களின் தாய்க் கட்சியாக விளங்கும் ம.இ.கா மீதான களங்கத்தை துடைக்க மித்ரா வழி பயன்பெற்ற இந்தியர்கள், அதன் பலன்கள் குறித்து புள்ளி விவரமாக சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என இன்சான் பெக்கா அமைப்புத் தலைவர், டாக்டர் பாலசந்திரன் கோபால் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே ம.இ.கா கட்சியை சேர்ந்தவர்கள் நல்லது செய்திருக்கலாம். ஆனால், அதனை கணக்கு வாரியாக தெரிவித்தால் யார் என்ன கேட்க போகிறார்கள்? இது இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நிதியாகும். அந்த வகையில் அந்நிதியினால் இந்திய சமுதாயத்தினர் பயன்பெற்றார்கள் என்பதற்கு சான்றுகள் இருந்தால் ம.இ.கா பற்றி யாரும் பேச மாட்டார்கள். மேலும், மித்ராவின் வழி நிதி பெற்ற பட்டியல் ஒன்று வாட்சாப்பில் வலம் வந்தது. அதில் பிசியோ மையத்திற்கு கூட நிதி கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு சமயத்தில் பிசியோ செண்டர்கள் மூடிக் கிடந்தது. மேலும் பிசியோ பயிற்சி ஒரு முறை ஒருவருக்கு கொடுப்பது அல்ல, அது தொடர்ந்து கொடுக்கப்படும் பயிற்சியாகும். ஆகையால், இது போன்ற விவகாரத்தில் ம.இ.கா பொறுப்பாளர்கள் புள்ளி விவரமாக விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 9 =