மித்ரா முறைகேடு தேசியப் பிரச்சினை

இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளி தவறான முறையில் கையாளப் பட்டிருப்பதில் போலீஸ், லஞ்ச ஒழிப்பு இலாகா, வருமான வரி இலாகா ஆகியவை முழு விசாரணை நடத்த வேண்டும். இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனைத் தவிர்த்து அதில் பெறும் நிதியினை குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சார்ந்த தலைவர்கள் கையாண்டிருப்பது நாட்டிற்கும் இந்திய சமூகத்திற்கும் செய்த துரோகமாகும் என நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அரசு இந்தியர்களுக்கு ஒதுக்கிய நிதி குறிப்பாக ஏழைகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட அந்நிதி ஒரு குறிப்பிட்ட தரப்பு அதனை சுயநலத்திற்கு பயன்படுத்தி இருப்பதை அரசு பார்த்தும் பார்க்காமல் இருப்பது மிக வேதனை அளிப்பதாக அவர் கூறினார். சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நேற்று ரவாங் செரண்டா அருகில் விஸ்மா எஸ்.பி. கேர் கட்டட அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். தான் நிதி அமைச்சராக இருந்தபோது இந்தியர்களுக்காக மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு அரசு பங்குகளை ஒதுக்கியதாக அவர் கூறினார். மித்ரா என்பது ஏழை இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதியாக இருந்தாலும் அது இப்பொழுது கையாளப்பட வேண்டும். இவ்விவகாரம் இந்தியர்களை மட்டுமே சார்ந்த ஒரு விவகாரமல்ல. இந்த முறைகேட்டில் இந்தியர்கள் அல்லாதவர்களான சீனர்கள், மலாய்க்காரரர்கள் ஆகியோரும் நியாயம் கேட்க தகுதி உடையவர்களே. அதுபோலத்தான் மற்ற இனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவகாரமும் தேசியப் பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். அதனை ஒதுக்கிய போது அதற்கான விதிமுறைகள் வழங்கி இருந்தார். ஆனால் அந்த விதிமுறைகளை தவிர்த்து அந்த பங்குகளை வழங்குமாறு அப்போதைய பிரதமர் தனக்கு கட்டளையிட்டதால் அதை அவ்வாறு செய்ததாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். பின்னர் அந்த நிதி அப்போது இருந்த ஒரு தலைவரின் தனிப்பட்ட கணக்கில் சேர்ந்திருப்பதை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்த பட்டதாக அவர் தெரிவித்தார். இதுபோல் இந்திய சமுதாய நிதி தவறான முறையில் கையாளப்படுவதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − three =