மித்ரா நிதி முறைகேடு: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் சிவக்குமார் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார் “போய் தோசை சாப்பிடுங்கள்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்திய சமூகத்திற்கான மித்ரா நிதி முறைகேடு தொடர்பாக ஒற்றுமைத் துறை அமைச்சருடன் எழுந்த கடுமையான வாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் சபாநாயகரால் அவையை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான எம் குலசேகரன் “போய் தோசை சாப்பிடுங்கள்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
முன்பு திட்டமிட்டபடி நவம்பரில் கூட்டம் நடைபெறாதது குறித்து இந்திய சமூகம் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறியதிலிருந்து இது தொடங்கியது.
எம் குலசேகரன் முன்பு திட்ட மிட்டபடி நவம்பரில் மித்ரா தொடர்பான விளக்கக் கூட்டம் நடைபெறாதது குறித்து கேள்வி எழுப்பியதிலிருந்து இந்த சர்ச்சை தொடங்கியது.
அந்த மாதம், மலாக்கா தேர்தல் முடிந்த பிறகு கூட்டம் நடத்தப் படும் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை நடைபெறவில்லை என்று குலசேகரன் சுட்டிக் காண்பித்தார்.
இதற்குப் பதிலளித்த தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹலிமா சாதிக், இந்த கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார்.
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) நிதி துஷ்பிரயோகம் தொடர்பான ஊழல் தடுப்பு விசாரணையின் அண்மைக்கால தகவல் குறித்து குலசேகரன் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதால், தன்னால் அதிகம் வெளிப்படுத்த முடியாது என்று ஹலிமா கூறினார்.
கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் மித்ராவிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்று வி சிவகுமாரின் கேள்விக்கு இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் சட்ட அமைச்சர் மற்றும் எம்ஏசிசியை மட்டுமே அவர் கேள்வி கேட்க முடியும் என்று அமைச்சர் பதிலளித்தார். இந்த பதில் மழுப்பலாக உள்ளது. நேரடியான பதிலை அமைச்சர் வெளியிட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
மித்ரா நிதி தனிநபர் கடனைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கூறப்படுவது முக்கியம் என்று சிவக்குமார் மீண்டும் வலியுறுத்தினார்.
ஹலிமா அவருக்கு பதிலளிக்க மறுத்து, மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கச் சென்றார், ஆனால், குலசேகரனும் சிவகுமாரும் எழுந்து நின்று கேள்விக்கான பதில்களைக் கோரினர்.
“இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பதால் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்ற விவரங்களை என்னால் உங்களுக்கு வழங்க முடியாது. உங்களுக்கு விவரங்கள் வேண்டுமானால், சட்ட அமைச்சரிடம் கேளுங்கள்,” என்று ஹலிமா மீண்டும் கூறியபோது இரண்டு உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் ஹலிமாவிற்கு எதிராக வாதங்கள் புரிந்தனர்.
அப்போது சபாநாயகர் அஸஹார் ஹருண், சிவகுமாரையும், குலாசேகரனையும் உட்காரும்படி உத்தரவிட்டு, ஹலிமாவின் உரைக்கான நேரம் இன்னும் இருப்பதை நினைவூட்டினார். ஹலிமாவின் உரையில் குறுக்கிட அவர்கள் இருவரும் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்.
ஆனால், சிவக்குமார் தொடர்ந்து நின்று கொண்டே பேசினார். இதனால் 10 நிமிடத்திற்கு “காற்று வாங்க” சிவக்குமாரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் செல்லும்படி அங்கிருந்த காவலர்களிடம் அஸஹார் உத்தரவிட்டார்.
“கேள்வி நேரத்தில், நீங்கள் விளக்கத்தை மட்டுமே கேட்க முடியும் – நீங்கள் விவாதிக்க முடியாது. நீங்கள் கேள்விகளைக் கேட்க விரும்பினால், நீங்கள் குறுக்கிட அனுமதி கேட்க வேண்டும், ”என்று அஸஹார் கூறினார்.
மித்ரா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது என்று குலசேகரன் மீண்டும் ஹலிமாவை நோக்கி கூறினார். அமைச்சர் தகவல்களை மூடிமறைக்கிறார் என்றும் குலசேகரன் குற்றம் சாட்டினார்.
மேலும், சபாநாயகர் “கேள்வி நேரத்தில்” உறுப்பினர்களை விவாதத்திற்கு அனுமதிப்பதில் “அதிக நெகிழ்வுத்தன்மையுடன்“ இருந்ததாகவும் மஇகா மீது அவருக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை என்றும் கூறினார்.
அதற்கு பதிலளித்த குலசேகரன் தனது ஈப்போ பாராட் தொகுதியில் நாட்டிலேயே அதிக சதவீத இந்தியர்கள் இருப்பதாகவும், எனவே, ஹலிமா தனது கேள்விகளுக்கு ஒளிவுமறைவின்றி பதில் கொடுக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு ஹலிமா குலசேகரனிடம் “நீங்கள் காலை உணவு உண்ணவில்லையா. நீங்கள் ஏன் திரும்பிச் சென்று தோசை சாப்பிடக்கூடாது? என் பதில்கள் உங்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது” என்று கிண்டலாக கூறினார். அதற்கும் செவிசாய்க்காமல் தனது வாதங்களை குலசேகரன் தொடர்ந்ததால் விரக்தியடைந்த சபாநாயகர், அவையை மதிய உணவுக்கு ஒத்திவைத்தார்.
கடந்த அக்டோபரில், மித்ரா நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 10 நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களை சேர்ந்த 18 பேரை எம்ஏசிசி கைது செய்ததாக தகவல் வெளியானது.
கடந்த மாதம், ஏழு மாநிலங்களில் மேலும் 22 பேரை எம்ஏஏசி கைது செய்தது. மித்ரா 2019 முதல் 2021 வரை 337 நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரிம.203 மில்லியனை மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 13 =