மித்ரா நிதியை ‘வட்டம்’ போட்ட கூட்டம் எது?


  ஏழை இந்தியர்களுக்காக நல்ல திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதற்கான நிதியை ஒரு சிலர் அபகரித்துக் கொள்கின்றனர். அதற்கு ஓர் உதாரணம் மித்ரா. மித்ரா நிதி பங்கீட்டில் உள்ள முறைகேடுகள் பற்றி தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும் அதற்கு முறையாக பதில் இல்லையென்று நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார் எதிர்க்கட்சித்தலைவர் அன்வார் இப்ராஹிம்.

  இந்தியர்களின் சமூக உருமாற்றத் திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் (10 கோடி) வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது தொடர்பான முழு விபரத்தை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி, ஓர் அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கே அதிகமாக ஒதுக்கப் பட்டு இருப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பலை விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு தரக்குறைவான தனி மனித தாக்குதல்களும், வசைபாடல்களும்தான் வெளிப்படுகின்றனவே தவிர முறையான பதிலை மித்ராவே அதற்கு பொறுப்பான அமைச்சோ வெளியிடவில்லை.
  இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட உபரி கேள்வியைத் தொட்டு பேசிய போட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற செயலை கடுமையாக சாடினார்.
  மித்ராவில் நடப்பதுபோல் நாட்டின் ஒட்டுமொத்த அடித்தட்டு ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி வெள்ளி பங்கீட்டிலும் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை கையாளவில்லை என்று அன்வார் இப்ராஹிம் தனது கடுமையான கண்டனத்தை பதிவிட்டார்.
  ஏழை மக்களுக்கான நிதி பங்கீட்டில் அரசாங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில் அவரின் தொடர் கேள்விக் கணைகளுக்கு அரசு தரப்பு முறையான பதிலை அளிக்கதடுமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  ஏழை இந்தியர்கள் பொருளாதார உயர்வுக்காக அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் அதாவது 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடுகளை பகிர்ந்து கொடுக்கப்பட்டதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏழைகளுக்காக கொடுக்கப்பட்ட இந்த பொருளாதார மேம்பாட்டு நிதி சம்பந்தமே இல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பது ஒரு முறைகேடான செயல் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்தியர்களின் பொருளாதார உயர்வு காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி தவறான முறையில் கையாளப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் அவர்களும் தவறான நிதி நிர்வகிப்பிற்கு நாடாளுமன்றத்தில் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  9 + seventeen =