மித்ராவின் உதவிப் பொருள்கள் அரசியல் கட்சிக்கு வழங்கப்பட்டனவா?

கோவிட் -19 தொற்றின் காரணமாக நாட்டிலுள்ள பெரும்பகுதியான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை இழந்து, வருமானம் இழந்த இதுபோன்ற குடும்பங்களுக்கு அரசு, பொது இயக்கங்கள் பல்வகையான உதவிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப் பினரும் தங்களுக்கு வழங்கிய 3 லட்சம் ரிங்கிட்டைக் கொண்டு மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கி வருகின்றார்கள். அதனைப் போலவே இந்தியர்களிடையே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவர்களால் செடிக் தொடங்கப்பட்டது. பின்னர் மித்ரா என பெயர் மாற்றம் பெற்ற அந்த இலாகா அதனை போல உதவிகள் செய்ய முற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மறுமலர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்தி வரவேண்டிய மித்ரா போர்டிக்சன் வட்டாரத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கு நிதியுதவி வழங்கி இருப்பதாக ஸ்ரீதஞ்ஜோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ எம். ரவி தனது அகப் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் இந்த நிதியின் மூலம் பெறப்பட்ட உணவு பொட்டலங்களை அவ்வட்டாரத்திலுள்ள உணவகத் திற்கு பாதி விலைக்கு விற்றதாக குற்றச்சாட்டை அவர் தெரிவித் திருந்தார். இது சமுதாயத்திற்கு செய்யும் அநியாயமாகும். அவ ரது அந்த குற்றச்சாட்டை மறுத்து அவ்வட்டார மஇகா தலைவர் கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டமன்ற துணை சபாநாயகருமான டத்தோ ரவி மீது போலீஸ் புகார் செய்தனர். அது ஒரு பொய்யான செய்தி என அத்தொகுதி மஇகா தலைவரான டத்தோ எம்.வேலு கூறியுள்ளார். மித்ரா வழங்கிய நிதி மூலம் பெறப்பட்ட உணவு பொட்டலங்களை அவ் வட்டாரத்தில் விநியோ கிக்க அத்தொகுதி ஒருங்கிணைப் பாளர்கள் டத்தோ ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் ஆர். ராஜேந்திரன் மூலமாக வழங்குவதற்கான ஏற்பாடு செய்ததாக டத்தோ வேலு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 13 =