மித்தாஸ் நகைக்கடை கொள்ளை முயற்சி!

0

நகைக்கடையில் நுழைந்து கொள்ளையிட முயன்ற கொள்ளையர்களின் முயற்சி தோல்வியில் முடியவே, அங்கிருந்து அவர்கள் வெறுங்கையுடன் தப்பிச் சென்றனர். இத்துணிகரச் சம்பவம் நேற்று அதிகாலை கெடா கூலிம் ஜாலான் செலாசே,தாமான் செமாராக்கில் அமைந்துள்ள மித்தாஸ் நகைக்கடையில் நிகழ்ந்தது.
அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கடையின் முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கடையினுள் இருந்த கண்ணாடிக் கதவையும் உடைத்து, உள்ளே நுழைந்து பாதுகாப்பு பெட்டகத்தையும் கண்ணாடிப்பேழைகளையும் உடைக்க மேற்கொண்ட முயற்சிகள் யாவும் ஈடேறாததால், சுமார் 6 .00 மணிக்கு அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
மூவருக்கும் மேற்பட்டோர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதும் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக மித்தாஸ் நகைக்கடையின் உரிமையாளர் டத்தோ விக்னேஸ்வரன் என்ற விக்கி தமிழ் மலர் நிருபரிடம் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனைகளை நடத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =