மிக விரைவில் பொருளாதார ஊக்கத் திட்டம்

0

கொரோனா நச்சு உயிரி பரவலால் நாட்டில் ஏற்பட்ட பொருளா தாரப் பின்னடைவுகளைச் சமாளிக்கும் வகையில் கூடிய விரையில் அதன் ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நேற்று அறிவித்துள்ளார்.

கொரோனா நச்சு உயிரி நாட்டின் சேவை மற்றும் சுற்றுலா துறையைக் கடுமையாகச் சேதமடையச் செய்துள்ளதால் அதை மீட்டெடுக்க 10 முதல் 15 பில்லியன் ரிங்கிட் தேவைப்படும் என்று பொருளாதாரச் சான்றோர் கள் மதிப்பிடுகின்றனர். அரசாங்கம் எவ்வளவு தொகையை இதற்கு ஒதுக்கப் போகிறது என்பதை அறிவிக்க மறுத்த குவான் எங், நிறைவேற்றப்படும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறினார். அது முடிந்தவுடன் இம்மாதக் கடைசி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் திட்டங்கள் அறிவிக்கப்படும்.

நேற்று முன்தினம் துறை சார்ந்த முனைவர்களோடு அரசாங்கம் சுமார் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியது. மேலும் ஒரு சில கலந்துரையாடல் தொடர்கள் நடத்தப்பட்ட பிறகு பிரதமர் மகாதீர் ஊக்கத் திட்டங்களின் விபரங்களை அறிவிப்பார். இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்தும் சுகாதார அமைச்சோடு கலந்தாலோசிக்கப்படும் என்றும் குவான் எங் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நோய் பாதிப்பினாலும், சீன நாட்டவர் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதாலும் சுமார் 95,000 விடுதி முன் பதிவு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுற்றுலா நிறு வனமான மாட்டா அறிவித்துள்ளது. மலேசிய விமான நிலையங்களில் மக்கள் பயண அதிகரிப்பு 5-6 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், அது 4.6-5.7 விழுக்காடாக குறையும் என்று மலேசிய விமானச் சேவை ஆணையம் மறு மதிப்பீடு செய்துள்ளது. நாட்டில் 8 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் காணப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் சுகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =