மாஸ் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளமற்ற விடுமுறை

0

கோவிட் 19 வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 3 மாத சம்பளமற்ற விடுமுறை வழங்கியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 வைரஸ் அபாயத்தைத் தொடர்ந்து தனது செலவினங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ‘தி எட்ஜ்’ தினசரி கூறியது.

அந்நிறுவனத்தின் 13,000 ஊழியர்களை 3 மாத சம்பளமற்ற விடுமுறை அல்லது குறைந்தது 3 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் சம்பளமற்ற விடுமுறையில் செல்லும்படி அந்நிறுவனம் பணித்துள்ளது.
இந்த சம்பளமில்லாத விடுமுறைத் திட்டத்தை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான மலேசிய வான்வெளி போக்குவரத்து நிறுவனம், ஃபயர் ஃபிளை, மாஸ் விங்ஸ், எம்ஏபி இஞ்ஜினீயரிங், மாஸ் கார்கோ ஆகிய நிறுவனங்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் ஏப்ரல் மாதம் வரை 2,000க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது. கோவிட் 19 வைரஸ் தாக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்குமான விமானச் சேவைகளை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =