மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவித்த சினிமா பிரபலங்கள்

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.செண்பகமூர்த்தி முதலிடம் பிடித்தார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் கிருஷ்ணசாமியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிரிபிள்ஜம்ப்பில் எஸ்.துரைராஜனும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதலில் விஷ்வாம்பரமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான குண்டு எறிதலில் டி.சித்தரஞ்சனும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நம்பீசனும் முதலிடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் டி.ருக்மணி தேவியும், 50 வயதுக்குமேற்பட்டவர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் சுந்தராம்பாளும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிரிபிள்ஜம்ப்பில் பி.சசிகலாவும் முதலிடம் பெற்றனர். 

சினிமா பிரபலங்கள்


முதல் நாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர்கள் ஆர்யா, எஸ்.ஜே. சூர்யா, நடிகை அதுல்யா, டைரக்டர்கள் கே.ஆர்., பிரபு சாலமன், மகிழ் திருமேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் எம்.செண்பகமூர்த்தி, செயலாளர் டி.ருக்மணி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − three =