மாவட்டம் விட்டு பொருட்கள் வாங்கச் சென்ற இரு ஆடவர்களுக்கு வெ 5,000 அபராதம்


மாவட்டம் விட்டு மற்ற மாவட்டத்திற்குப் பொருட்கள் வாங்கச் சென்ற இரு ஆடவர்களுக்கு தலா வெ 5,000 காவல் துறை அபராதம் விதித்தது.
26 மற்றும் 33 வயதுடைய அவ்விரு ஆடவர்களை குயின்ஸ் பே மேல் பேரங்காடியில் மாலை 3.30 மணியளவில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எவ்வித ஆவணமும் இல்லாமல் அப்பகுதியிலிருந்தது தெரிய வந்ததாகத் தென் மேற்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டன் அ.அன்பழகன் கூறினார்.மாவட்டம் விட்டுச் சென்றதுக்கான ஆதாரக் கடிதம் இருக்கின்றதா என அந்த ஆடவர்களிடம் கேட்ட காவல் பணியாளர்கள் அவர்கள் இல்லை எனக் கூறவே அவ்விருவருக்கும் வெ 5,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மேலும் அ.அன்பழகன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + eight =