மாற்று நாள்களிலும் குறைவான நேரத்திலும் வகுப்புகளை நடத்தலாம்!

பள்ளிகளை மீண்டும் திறந்து வகுப்புகளைப் மாற்று நாள்களில், ஒரு நாள் விட்டு மறுநாளில் நடத்தலாம் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட்-19இன் தாக்கம் குறைந்திருக்கும் நிலையில், சமூக இடைவெளியை அனுசரிக்கும் வகையில் மேற்கண்ட முறையில் வகுப்புகளை நடத்தலாம் என்று பூன் சை பரிந்துரைத்தார்.
தொடக்கப்பள்ளிகளின் கீழ்நிலை வகுப்புகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் மேல்நிலை வகுப்புகளை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தலாம்.
மேலும், பாட போதனைகளின் நேரத்தைக் குறைப்பதன் மூலம், ஆசிரியர்கள் 6 நாள்களிலும் போதிப்பது தவிர்க்கப்படலாம். மாணவர்கள் ஆசிரியர்களோடு நேரடித் தொடர்பை வைத்திருப்பதே இங்கு முக்கியமாகும்.
தற்போது பொதுத்தேர்வுகளை எழுதும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
எனவே, வகுப்புகளைத் தொடங்க கோவிட்-19 க்கு அப்பாற்பட்டும் அரசு சிந்திக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வகுப்புகளை மீண்டும் தொடங்க காலம் கனிந்து விட்டதாகவும் மாணவர்கள் நீண்ட நாள்களுக்கு வீட்டிலேயே அடைந்து கிடக்கக் கூடாது. அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்காக வகுப்புகள் திறக்கப்பட வேண்டும்.
பள்ளிகள் தொடங்கிய பின்னர், மாணவர்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் பூன் சை தெரிவித்தார்.
கோவிட்-19இன் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மார்ச் 14ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களது சக மாணவர்களையும் நண்பர்களையும் சந்திக்காமல் இருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோயிலிருந்து மீண்டு வருவது தற்போது 96.7 விழுக்காடாக இருப்பதாகவும், 16 நாள்களாக தொடர்ந்து இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + sixteen =