மார்ச் மாதம் அறிமுகமாகும் ஐபோன் எஸ்.இ.2?

0

ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாத வாக்கில் புதிய ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்.இ.2 மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
முன்னதாக கடந்த ஆண்டு மார்த் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்தது. இதே விழாவில் பல்வேறு ஐ.ஒ.எஸ். செயலிகள் மற்றும் சேவைகளை அறிவித்தது. அந்த வகையில் 2020 ஆண்டிற்கான விழா மார்ச் 31-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் எஸ்.இ.2 லீக்

புதிய ஐபோன்களின் விற்பனை ஏப்ரல் 3-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் 2016-இல் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் எஸ்.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் ஐபோன் 5எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்.இ.2 ஐபோன் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இதில் டச்ஐடி சென்சார், 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஏ13 பயோனிக் சிப்செட், பின்புறம் ஒற்றை கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.
2020 ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, ஐபேட் ப்ரோ சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + twenty =